‘இ. நமசிவாயம்- அவரது வாழ்க்கையும் காலமும் திருக்கேதீச்சரப் புனருத்தாரணத் திருப்பணியும்’ நூல் வெளியீட்டு விழா
‘இ. நமசிவாயம்-அவரது வாழ்க்கையும் காலமும் திருக்கேதீச்சரப் புனருத்தாரணத் திருப்பணியும்’ நூல் வெளியீட்டு விழா அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவரும் இந்து வித்தியா சங்கத்தின் பொதுச் செயலாளருமான கந்தையா நீலகண்டன் தலைமையில் நேற்று மாலை (25.04.2013) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 அளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பி. குமரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் நூல் ஆசிரியர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், திருக்கேதீச்சரம் ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் எம். தவயோகராஜா, கலாபூஷணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மொழிகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தன், சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திருக்கேதீச்சரம் மற்றும் புதிய கதிரேசன் ஆலய தர்மகர்த்தா சுப்பிரமணிய செட்டியார், சைவ மங்கையர் கழகத் தலைவி சிவானந்தினி துரைசாமி உட்பட பல பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவிகள் தேவாரப் பண் இசைத்தனர். மூதறிஞர், சிவநெறிக்காவலர், சிவஞானச் செல்வர், சித்தாந்த வித்தகர், சிவமாமணி அமரர் இராசப்பிள்ளை நமசிவாயத்தின் திருவுருவப்படத்திற்கு எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார்நடேசன் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றினார். நூல் வெளியீட்டு விழா அறிமுகம் மற்றும் வரவேற்புரையைத் தொடர்ந்து விழா தலைமையுரையை சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ஆற்றினார்.
சிறப்புரைகளை திருக்கேதீச்சரம் ஆலய திருப்பணிச்சபைத் தலைவர் எம். தவயோகராஜா, கலாபூஷணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன், சைவ மங்கையர் கழகத் தலைவி சிவானந்தினி துரைசாமி ஆகியோர் ஆற்றினர். வைத்தியக்கலாநிதி ராஜன் நமசிவாயம் நூல் முதற்பிரதியை இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பி. குமரனிடம் கையளித்தார்.
தொடர்ந்து விருந்தினர்கள் நூல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆய்வுரையை ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மொழிகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீபிரசாந்தன் ஆற்றினார். பேராசிரியர் எஸ்.பத்மநாதன் நூலாசிரியர் உரையை வழங்கினார். நிறைவாக வைத்தியக்கலாநிதி ராஜன் நமசிவாயம் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து அபிநயஷேத்ரா நாட்டியப்பள்ளி இயக்குனர் திவ்யா சிவநேசன் வழங்கிய நடனம் விழாவை மேலும் சிறப்புற வைத்தது.

Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment