அமெரிக்க அரசாங்கத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார அலுவலகர் மன்னார் விஜயம்.
மன்னாருக்கு வருகை தந்த அமெரிக்க அரசாங்கத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார அலுவலகர் லெஸ்லி ரேய்லர் இன்று காலை மீனவ பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆகியோரை சந்தித்த நிலையில் இறுதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடினர்.
இதன் போது காணி பிரச்சினை,மீனவர்களின் பிரச்சினைகள் உற்பட வன்னி மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தன்னிடம் கோட்டறிந்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார அலுவலகர் மன்னார் விஜயம்.
Reviewed by NEWMANNAR
on
April 25, 2013
Rating:
No comments:
Post a Comment