அண்மைய செய்திகள்

recent
-

நாற்பது வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி

மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பிரதான வீதி கடந்த 40 வருட காலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


 துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் இந்த பிரதான வீதியூடாக விநாயகபுரம், நட்டாங்கண்டல், பனங்காமம் ஊடாக வவுனியாவை இலகுவாகச் சென்றடையக் கூடியதாக உள்ளது. ஆனால் சுமார் 45 கிலோமீற்றர் நீளமான இந்த வீதி கடந்த 40 வருடங்களாகப் புனரமைக்கப்படாத நிலையில் குன்றும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றது.

 இதனால் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் மல்லாவி நகருக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாற்பது வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி Reviewed by Admin on April 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.