மன்னாரில் விளையாட்டு மைதானம் இடமாற்றம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பு.
மன்னார் எமில் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த பொது விளையாட்டு மைதானம் அரசியல் ரீதியாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைமையில் விசேட குழுவினர் நேற்று புதன் கிழமை கொழும்பிற்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமே அவர்களை சந்திந்து நிலவரத்தை தெளிவு படுத்தியதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
-இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-மன்னார் எமில் நகர் பகுதியில் பிரமாண்டமான விளையாட்டு மைதானம் ஒன்று அமைப்பதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அரசியல் ரீதியாக குறித்த விளையாட்டு மைதானம் இரகசியமான முறையில் தாராபுரம் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பில் மன்னாரில் உள்ள விளையாட்டுக்கழகங்கள்,உள்ளுராட் சி மன்றங்கள்,பொது அமைப்புக்கள் ஆகியவை இணைந்து பல முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் எமக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைமையில் மன்னார் நகர சபை,பிரதேச சபை, மற்றும் விளையாட்டுக்கழகங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோரை இணைத்து நேற்று புதன் கிழமை கொழும்பிற்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமே அவர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை தெழிவு படுத்தினோம்.
குறிப்பாக எமிழ் நகர் பகுதியில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியின் நிலவரம்,அதன் தண்மை பற்றியும் தெழிவு படுத்தினோம்.இதன் போது எமது கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இந்த விளையாட்டு மைதான பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
-எது எப்படி இருந்தாலும் எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற நிலையில் குறித்த விளையாட்டு மைதானம் அதே இடத்தில் அமைப்பதற்காண நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
-எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டின் பின் விசேட பொறியியலாளர் குழு மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறித்த மைதானம் தொடர்பான ஏனைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என எங்களுக்கு உறுதியளித்தார்.
-இது எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார்,அருட்தந்தை எமிழியான்ஸ் பிள்ளை,பிரஜைகள் குழுவின் உப தலைவர் சிந்தாத்துரை, மன்னார் நகர சபை தலைவர்,எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்,நகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,சென் ஜோசப் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பொபி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் விளையாட்டு மைதானம் இடமாற்றம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 04, 2013
Rating:
No comments:
Post a Comment