அண்மைய செய்திகள்

recent
-

பொது இடங்களில் சிகிரெட், வாழைப்பழம் என அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய எம்.பிக்கள் குழுவினர்(Photo)


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பொது இடங்களில் சிகிரெட்டுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இக்குழுவினர் கலந்து கொண்ட நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையில் சிகிரெட்டுடன் வலம் வந்தனர். அதேபோல் சிலர் ஒவ்வொரு இடங்களிலும் நின்று புகைப்படங்கள் எடுப்பதில் மட்டும் ஆர்வங் கொண்டிருந்தனர்.


இன்னமும் சில உறுப்பினர்கள் யாழ்ப்பாண கதலி வாழைப்பழம் சுவையாக உள்ளதாகத் தெரிவித்து, கும்பங்களில் வைத்திருந்த வாழைப்பழங்களையும் தேடித் தேடி உண்டனர்.

இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் மிகவும் கவலைக்குரியதாக மாறியன.





 ஒரு நகைச்சுவைக் குழுவினர் போல செயற்பட்டது மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. 
பொது இடங்களில் சிகிரெட், வாழைப்பழம் என அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய எம்.பிக்கள் குழுவினர்(Photo) Reviewed by NEWMANNAR on April 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.