அண்மைய செய்திகள்

recent
-

நில அபகரிப்பு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் [ படங்கள் ]

முல்லைத்தீவு மாவட்டத்தின் நில அபகரிப்பு கடல் அபகரிப்பு மற்றும் காடழிப்பிற்கு எதிராகவும் சுதந்திரமாக கடற்தொழிலை மேற்கொள்ள அனுமதிக்க கோரியும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முழுமையான வீட்டுத்திட்டத்தை வழங்கக்கோரியும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமையில் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.   


முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் துரைராசா ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமுகம் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளர் அருட்பணி ஜோய் பெர்னாண்டோ மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் நிர்வாக செயலாளர் திருமதி புஸ்பமலர் ஆகியோர் உரையாற்றினார்கள். 

இவர்களுடன் அரசியல் பிரமுகர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிவசக்தி ஆனந்தன் வினோ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவருமான ஆனந்த சங்கரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான திரு கஜேந்திரன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். 

இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையிலான குழுவினர் மேலதிக அரசாங்க அதிபர் மோகன்ராஜ் இடம் தமது மனுக்களை கையளித்தனர். 






நில அபகரிப்பு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் [ படங்கள் ] Reviewed by NEWMANNAR on April 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.