மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதி
மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று அனுமதியளித்துள்ளது.
இதன்படி, கடந்த 12ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் யாவும் உயர்த்தப்படவுள்ளன. புதிய கட்டண நிர்ணயம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு பரிந்துரைகளை செய்துள்ளது.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மக்களிடம் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் கருத்துக்கள் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருத்துக்களை கவனத்திற் கொண்டு கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதி
Reviewed by NEWMANNAR
on
April 18, 2013
Rating:

No comments:
Post a Comment