அண்மைய செய்திகள்

recent
-

சவுதி அரேபியாவில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு சாலை ஓரமாக வாழும் 300 ஈழத் தமிழர்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் தமிழர்கள் சவுதி அரேபியா ஜெத்தா நகருக்கு கட்டுமான வேலை நிமித்தமாக சென்றுள்ளனர்.
இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர்.  இவர்களுக்கு சவுதி அரேபிய அரசின் அடையாள அட்டையான அக்காம்மா இதுவரை வழங்கப்படவில்லை.

அண்மையில் சவுதி அரசு அக்காமா இல்லாத வெளிநாட்டவர்களை எந்த நிறுவனமும் பணியில் அமர்த்தக் கூடாது என கடுமையான சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தை தொடர்ந்து பல வெளிநாட்டவர்கள் பல நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியர் ஆயிரக்கணக்கில் வெளியேறினர்.

அவர்களை பாதுகாக்க இந்திய தூதரகம் முயற்சிகள் எடுத்தது. பல இந்தியர்களையும் பத்திரமாக மீட்டது இந்திய அரசாங்கம்.

ஆனால் இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்கள் மூன்று மாதத்திற்கு முன்பு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்களை பத்திரமாக மீட்டெடுக்க இலங்கை அரசு முன்வரவில்லை.

அதனால் இப்போது இலங்கை தமிழர்கள் சுமார் 300 பேர்கள் உறைவிடம், உணவு, தண்ணீர், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் இல்லாமல் சாலை ஓரத்தில் கொளுத்தும் வெயிலில் வாடுகின்றனர்.

இந்த தகவலை சவுதியில் இருந்து ராஜன் என்பவர் தெரிவித்தார்.

இவர்களை உடனே சிங்கள அரசு காப்பாற்றி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளனர் தமிழர்கள்.

இதில் சில சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கை அரசு நடவடிக்கை எடுக்குமா?


சவுதி அரேபியாவில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு சாலை ஓரமாக வாழும் 300 ஈழத் தமிழர்கள்! Reviewed by NEWMANNAR on April 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.