கிளிநொச்சியில் கூட்டமைப்பின் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-அமைச்சர் றிஸாட்,பா உ.ஹீனைஸ் பாரூக் கூட்டாக கோரிக்கை.
இது தொடர்பில் அவர்கள் இருவரும் இணைந்து நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இன்று இலங்கையில் வித்தியாசமான பயங்கரவாத நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் சட்டத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் பொலிஸர் தவரியுள்ளனர்.
கடந்த 30 வருடங்கள் இடம் பெற்ற யுத்தத்தில் அப்பாவி உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.இனவாதம்,மதவாதம் பேசப்பட்டு இன்று மக்கள் மத்தியில் மீண்டும் பிரிவினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம பெற்று வருகின்றது.
இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய பொறுப்பும்,சட்டத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளது.அதே போல் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஒரு பொறுப்புள்ளது.இந்த நாட்டில் சமாதானத்தையும்,நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
-எனவே கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த தாக்குதல் தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளது.யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தும் போழுது தான் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுயள்ளது.
(மன்னார் நிருபர்)
(s.vinoth)
கிளிநொச்சியில் கூட்டமைப்பின் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-அமைச்சர் றிஸாட்,பா உ.ஹீனைஸ் பாரூக் கூட்டாக கோரிக்கை.
Reviewed by Admin
on
April 01, 2013
Rating:
No comments:
Post a Comment