நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை: மன்னார் பேராயர்
நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சில ஊடகங்களில் நாட்டை பிளவுபடுத்த கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் தாம் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை: மன்னார் பேராயர்
Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:

No comments:
Post a Comment