முசலியில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை ஆரம்பம் (பாடங்கள் )

இதன் அடிப்படையில் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெண்டி போன்ற பயிர்களை தற்போது உற்பத்தி செய்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான பசலைகளையும் ஆலோசனையினையும் வழங்குவதற்கு மன்னார் மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வருவது மிகவும் அரிதாகவே உள்ளதென மணற்குளம் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கடந்த முறை அதிகமான விவசாயிகள் மிளகாய் மற்றும் கடலை போன்றவற்றை பயிரிட்டனர். ஆனால் அதற்கான உரிய விலையும் அழிவு மானியங்களும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை என அந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் வீட்டுக்காணிகளில் உள்ள கிணறுகள் எல்லாம் யுத்தத்தினால் அழிவடைந்து இன்னும் புணர் நிர்மானம் செய்யப்படாமலே உள்ளது.
எனவே முசலி பிரதேச உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரித பனிகளை முன்னெடுக்குமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHMWajith
முசலியில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை ஆரம்பம் (பாடங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:

No comments:
Post a Comment