அண்மைய செய்திகள்

recent
-

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மன்னார் விஜயம்.


எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் நாளை மன்னாருக்கு வருகைதரவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் முஹமட் பஸ்மி தெரிவித்தார்.


மன்னாருக்கு வரும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மன்னார் நகர சபை மண்டபத்தில் மக்களுடன் பொது சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் போது மீனவ சங்க பிரதிநிதிகள்,விவசாய அமைப்புக்கள்,மாதர்,கிராமச்சங்க பிரதிநிதிகள்,வர்த்தகர்கள் என அணைவருடனும் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

-இதனைத் தொடர்ந்து மன்னார் மூர்வீதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் முஸ்ஸிம் மத பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன்,ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கலான ஜயலத் ஜயவர்த்தனா,ரவி கருநாநாயக்க,ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் வருகை தரவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் முஹமட் பஸ்மி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மன்னார் விஜயம். Reviewed by NEWMANNAR on April 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.