மன்னார் அல்-அஷ்கர் பாடசாலையில் கைக்குண்டு மீட்பு

குறித்த பாடசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானத்தின் போதே கைக்குண்டு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
எதிர்வரும் எட்டாம் திகதி மன்னார் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் விற்பனைச் சந்தை இடம்பெறவுள்ளது.
இதற்காக மன்னார் பிரதேச செயலகம், மன்னார் அல்-அஷ்கர் பாடசாலையின் மைதானத்தை துப்புரவு செய்யும் பணியினை இன்று காலை தொடங்கியபோதே கைக்குண்டு தென்பட்டுள்ளது.
இது குறித்து மன்னார் படைத்தரப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணைக்கான விடுமுறை தினமான இன்று பாடசாலை வளாகத்தினுள் காணப்பட்ட கைக்குண்டின் காரணமாக பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மன்னார் அல்-அஷ்கர் பாடசாலையில் கைக்குண்டு மீட்பு
Reviewed by Admin
on
April 05, 2013
Rating:

No comments:
Post a Comment