மன்னாரில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-மீள் குடியேற்ற கிராம மக்கள் பெருமளவில் பாதீப்பு
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.
எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி மன்னார் மாவட்டச் செயலகத்தினுடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அனுமதியை பெறுவதற்கு கேள்வி கோரல் விடுத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் தமது சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.
-தமக்கு உரிய பதில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் கிடைக்கும் வரை தமது பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பயணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பரிவுக்குற்பட்ட சகல கிராமங்களிலும் மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று மன்னாரில் தனியார் பேரூந்துகள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதீப்படைந்துள்ளனர்.
தற்போது தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது.
வேறு மாவட்டங்களில் இருந்தும் தனியார் பேரூந்துகள் மன்னாரிற்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.
அரச போக்குவரத்துச் சேவைகள் மாத்திரமே தற்போது இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-மீள் குடியேற்ற கிராம மக்கள் பெருமளவில் பாதீப்பு
Reviewed by Admin
on
April 05, 2013
Rating:
No comments:
Post a Comment