மாந்தை மேற்கில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரங்களை வெட்டிய 6 பேர் கைது.
.jpg)
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட யோத வாவீ காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரங்களை வெட்டிய 6 போரை விடத்தல் தீவு பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக விடத்தல் தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குனதிலக்க தெரிவித்தார்.
-விடத்தல் தீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முதிரை மரங்களை மீட்டதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 6 சநபர்களை கைது செய்ததோடு கத்தி,கோடாரி உள்ளிட்ட சில உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த 6 சந்தேக நபர்களும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை விடத்தல் தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு விசாரனைகளின் பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக விடத்தல் தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குனதிலக்க மேலும் தெரிவித்தார்.
மாந்தை மேற்கில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரங்களை வெட்டிய 6 பேர் கைது.
Reviewed by Admin
on
April 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment