அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த ச.தரப் பரீட்சையில் மன்னார், முசலி ம. வி. 86 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

"இம்முறை நடைபெற்ற க.பொ.த ச.தரப் பரீட்சையில் மன்னார், முசலி மகா வித்தியாலயத்தில் 86 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். 
இதில் 8 ஏ, 1சி என்ற சிறந்த பெறுபேறை பாரூக் ஸபீபா என்ற மாணவி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு மாணவன் 7ஏ, 2பி யும் இன்னொரு மாணவி 7ஏ, 1பி. 1சி. இன்னுமொரு மாணவி 6ஏ, 2பி, 1சி மேலும் பலர் பல பாடங்களில் அதி கூடிய புள்ளியான ஏ சித்தி பெற்று சித்தியடைந்துள்ளார்கள். 


இவ்வாறு, மன்னார், முசலிப் பிரதேச சிலாபத்துறை பாடசாலையில் ஒரு மாணவி 7 ஏ, 2 பி எடுத்துள்ளதுடன் அதிகமான மாணவர்கள் தரமாக சித்தியடைந்துள்ளார்கள். 

அவ்வாறு, மன்னார், முசலிப் பிரதேச பண்டாரவெளிப் பாடசாலையில் ஒரு மாணவன் 5 ஏ, 3 பி, 1 சி எடுத்து சித்தியடைந்துள்ளதுடன், அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். 

ஆனால், இப் பிரதேசம் கடந்த 20 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். இம்மக்கள் கடந்த 20 வருடமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் இப்போதுதான் மீளக்குடியேறுகிறார்கள். இப்பிரதேசம் அடர்ந்த காடுகளாக காணப்படுகின்றது. இப்போதுதான் இப்பிரதேசம் ஓரளவு அபிவிருத்தி என்ற வாசத்தை நுகர்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையில் போதிய பாடம் சார் ஆசிரியர்கள் இல்லை. அவ்வாறே போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இம்மாணவர்கள் அதி கூடிய சித்திகளைப் பெற்றுள்ளார்கள். 

இம்மாணவர்கள் உயர்தரத்தில் விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்பதாக இருந்தால் அவர்கள் எங்கு சென்று கற்பது என அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முஸ்லிம் அமைப்புகள், புத்திஜீவிகள், பெருந்தகைகள், அரசியல்வாதிகள் இவர்களது விடயத்தில் அக்கறை செலுத்துமாறு இப்பிரதேச மக்கள் கோருகின்றனர்."

(அல்ஹம்துலில்லாஹ்) 
க.பொ.த ச.தரப் பரீட்சையில் மன்னார், முசலி ம. வி. 86 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். Reviewed by NEWMANNAR on April 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.