மன்னாரில் 254 சாதனையாளர்கள் கௌரவிப்பு (படங்கள் )
மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் கௌவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் மீரா முகைதின் முஹம்மது சியான் தலைமையில் இடம் பெற்றது.
2012 ஆம் ஆண்டிற்காண பாடவிதானம் மற்றும் இணைப்பாட விதானம் ஆகியவற்றில் மாகாண மட்டம்,தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை புரிந்த 254 சாதனையாளர்கள் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியூதின் அவர்களும்,கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது விருந்தினர்களாக வடமாகான கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்திய சீலன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீச்திர ,பிரதேசச் செயலாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பொலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறந்த ஆசிரியர்கள்,அதிபர்களும் கௌரவிக்கப்பட்டதோடு 254 சாதனையாளர்களுக்கும் பதக்கம்,வெற்றிக்கேடயம் மற்றும் சான்றுதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் மீரா முகைதின் முஹம்மது சியான் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் 254 சாதனையாளர்கள் கௌரவிப்பு (படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 09, 2013
Rating:
No comments:
Post a Comment