தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மன்னாரில் மலிவு விற்பனையும்,கண்காட்சியும்-படங்கள்
-வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதீயுதின் குறித்த நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர ,மன்னார் பிரதேசச் செயலாளர் செல்லையா தயானந்தா,மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல்,அமைச்சின் இணைப்பாளர் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது உள்ளுர் மற்றும் வெளியூர் உற்பத்திப்பொருட்களின் மலிவு விற்பனையும் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வுகளுக்காண நிதி உதவியினை சமூர்த்தி அதிகார சபை வழங்கியிருந்ததோடு மன்னார் பிரதேச செயலகமும்,மன்னார் மாவட்டச் செயலகமும் அனுசரனை வழங்கியிருந்தது.
குறித்த மலிவு விற்பனை நாளை செவ்வாய்க்கிழமை வரை இடம் பெறும் என மன்னார் பிரதேச செயலாளர் செல்லையா தயானந்தா தெரிவித்தார்.
தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மன்னாரில் மலிவு விற்பனையும்,கண்காட்சியும்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2013
Rating:
No comments:
Post a Comment