அண்மைய செய்திகள்

recent
-

றீலோட் போட மறுத்ததால் கஞ்சா பொட்டலம் வைத்த பொலிஸார்.

நேற்று முன்தினம் புதுத்தெரு, உப்புக்குளம், மன்னார் எனும் முகவரியில் அமைந்துள்ள தொலைத்தொடா்பு நிலையத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தைச் சோ்ந்த தமிழ் பேசும் கான்ஸ்டபிள் ஒருவா் தமது கையடக்கத் தொலைபேசிக்கு றீலோட் செய்துவிடுமாறும் பணத்தை பின்னா் தருவதாகவும் கூறியுள்ளார்.

 எனினும் உரிமையாளா் றீலோட் செய்துவிட மறுக்கவே “நான் யார் என்று உனக்கு நாளை காட்டுகின்றேன்” என்று கூறிச் சென்றுள்ளார்.
நேற்றைய தினம் கூறியதைப்போலவே பிற்பகல் 2 மணியளவில் குறித்த தொலைத்தொடா்பு நிலையத்திற்குள்ளே வந்த கான்ஸ்டபிள் தான் மறைத்து கொண்டு வந்த கஞ்சா பொட்டலம் ஒன்றை யாருக்கும் தெரியாது அங்கு வைப்பதற்கு எத்தனித்த போது அங்கு நின்ற சிலா் இவரது தில்லு முல்லு விளையாட்டைக்கண்டு கேள்வி கேட்க முற்பட்டனா். எனினும் குறித்த தமிழ் கான்ஸ்டபிள் அவசர பொலிஸ் சேவை இலக்கமான 119 ற்கு அழைத்து காவல்துறை வண்டியையும் தொலைத்தொடா்பு நிலையத்திற்கு முன்னால் வரவழைத்தார். 

பின்னா் அங்கு கூடிய பொதுமக்கள் நியாயம் கேட்க ஆரம்பிக்க தொடங்கியதும் அங்கு நிற்பது தமக்கு ஆபத்து என எண்ணிய காவல்துறையினா் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டனா். இச்சம்பவத்தை நேரில் கண்ணுற்ற பொதுமக்கள் பலரும் காவல்துறையினரின் கீழ்த்தரமான வேலையைக் கண்டு தமக்குள்ளே இதுதான் காவல்துறையினரின் சேவையா? என முணுமுணுத்துச் சென்றனா்.

மன்னார் இணையத்துக்காக வன்னி மைந்தன் 
றீலோட் போட மறுத்ததால் கஞ்சா பொட்டலம் வைத்த பொலிஸார். Reviewed by மன்னார் மன்னன் on April 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.