59.91 சதவீதமான மாணவர்கள் வடக்கில் உயர் தரத்துக்குத் தகுதி; 118 மாணவர்கள் 9 பாடங்களில் \"ஏ\' தரச் சித்தி
அத்துடன் வடமாகாணத்தில் உயர் தரத்துக்குத் தகுதி பெற்றோர் 59.91 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றோர் சத வீதத்தில் வடமாகாணத்தில் யாழ். கல்வி வலயம் முதலிடத்தில் உள்ளது.
யாழ். கல்வி வலயத்தில் 53 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 67.79 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 21 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 67.64 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
மன்னார் கல்வி வலயத்தில் 3 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 67.44 சதவீத மாணவர்கள் உயர் தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமராட்சி கல்வி வலயத்தில் 20 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றைப் பெற்றுள்ளதுடன் 64.74 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தென்மராட்சி கல்வி வலயத்தில் 3 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் 60 சதவீத மாணவர்கள் உயர் தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 9 "ஏ' பெறுபேற்றை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. 58.25 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வலிகாமம் கல்வி வலயத்தில் 14 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றைப் பெற்றுள்ளதுடன் 38.14 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மடு கல்வி வலயத்தில் 9 "ஏ' பெறுபேற்றை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை. 53.18 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் ஒருவர் 9 "ஏ' பெறுபேற்றைப் பெற்றுள்ளதுடன் 48.46 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் 3 மாணவர்கள் 9 "ஏ' பெறுபேற்றைப் பெற்றுள்ளதுடன் 47.23 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தீவக கல்வி வலயத்தில் 9 "ஏ' பெறுபேற்றை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை. 44.29 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
துணுக்காய் கல்வி வலயத்தில் 9 "ஏ' பெறுபேற்றை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை. 42.71 சதவீத மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
59.91 சதவீதமான மாணவர்கள் வடக்கில் உயர் தரத்துக்குத் தகுதி; 118 மாணவர்கள் 9 பாடங்களில் \"ஏ\' தரச் சித்தி
Reviewed by Admin
on
April 25, 2013
Rating:

No comments:
Post a Comment