அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண தேர்தல் களம்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்?

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதற்கு அவர் இணங்கியுள்ளதாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தவில்லை.

கொழும்பு ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் வரும் 26ம் நாள் இடம்பெறவுள்ள தந்தை செல்வாவின் 36வது நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரையாற்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் உரையாற்றவுள்ளார்.

முன்னதாக, மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று ஊகங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண தேர்தல் களம்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்? Reviewed by NEWMANNAR on April 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.