வட மாகாணசபை முதலமைச்சர்?- தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு: சி. சிறீதரன்
வட மாகாணசபை முதலமைச்சராக வரக்கூடியவர் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்க கூடியதுமான கௌரவமான தீர்வை
பெற்றுக்கொடுக்க கூடிய தலைமைத்துவத்தை வழங்குபவராகவும், நேர்மையான, நீதியான ஒருவராக இருக்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என பா. உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் வரவேண்டும் என்பதை அவர்கள் கனவு காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்படும் நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாணசபை முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தங்களை பிரதி நிதித்துவப்படுத்துவர், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பவராகவும், தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
பதவியின் பொருட்டு கதிரையை அலங்கரிப்பவராகவோ, அரசாங்கத்திற்கு சார்பானவராகவோ, அல்லது உலகம் சொல்வதை செய்பவராகவோ இருப்பவரை தமிழ் மக்கள் விரும்பவில்லை.
18 வருடங்களாக இணைந்திருந்த வடகிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் வட மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என உலகம் எண்ணுகின்றது. இவ்வாறான நிலையில் முதலமைச்சராக வருபவர், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் போது தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாட்டை எடுத்துரைத்து இனப்பிரச்சினை தீர்வு எட்டுவதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் ஒருவராக இருக்க வேண்டும்.
சுயநிர்ணய உரிமை, மரபுவழி தாயகம், தமிழ் தேசியம், என்பன பேசாப்பொருளாக மாறிவருகின்றன. எனவே தமிழ் மக்களின் பாரம்பரியங்களை பேணி எங்களை நாங்களே ஆழக்கூடிய, வெளிநாட்டு நிதியை கையாள கூடிய அதிகாரம் உள்ள தீர்வு குறித்து பேசுபவராக இருக்க வேண்டும். 18வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் திவிநெகும முலம் மாகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது இருந்த முக்கிய அதிகாரங்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர தீர்வுக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கும் ஒருவராக இருப்பதும் அவசியமாகின்றது.
தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக் கூடிய அதிகாரம் உள்ள தீர்வாக, காணி, பொலிஸ், நிதி அதிகாரங்களை கையாளக்கூடியதாக நீடித்து நிலைக்கும் கௌரவமான தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்.
இத்தீர்வினால் நாடு பிளவுபடாது என சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து சிங்கள தலைவர்கள், உலகிற்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் தன்மையும் இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வுக்காக செயற்படும் நேர்மை, நீதி உள்ள ஒருவரே முதலமைச்சாரக வரவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக யார் வரவேண்டும் என்பது குறித்தெல்லாம் தமிழ் மக்கள் கனவு காணவில்லை என்றார்.

Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:

No comments:
Post a Comment