சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயன்படுத்தி கடல் மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்தனர்.(படங்கள் )
சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
-இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது.
-மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்தார்.
-இவர்களுடைய வருகையை பதிவு செய்ய மற்று விசாரனைகளுக்காக குடிவரவு,குடியகழ்வு திணைக்கள அதிகாரி எஸ்.யசோதன்,சுங்கத்திணைக்கள அதிகாரிகளான என்.எஸ்.குமார நாயக்க,என்.வீரசிங்க ஆகியோர் தலைமன்னார் கடற்கரைக்குச் சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயன்படுத்தி கடல் மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்தனர்.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
May 28, 2013
Rating:
No comments:
Post a Comment