கற்கிடந்த குளம் கிராமத்தில் அமைந்துள்ள 06 ஏக்கர் தோட்டக்காணியினுள் உள்ளே நுழைய தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சு அனுமதி மறுப்பு-செல்வம் எம்.பி யிடம் முறைப்பாடு(படங்கள் )
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
அடர்ந்த காடுகளாக காணப்பட்ட குறித்த காணி கடந்த 33 வருடங்களுக்கு முன் துப்பரவு செய்யப்பட்டு குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்களினால் தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் குறித்த காடுகளை துப்பரவு செய்து தோட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.வாழை,தென்னை ,பப்பாசி உற்பட பல்வேறு கன்றுகள் நாட்டி தோட்டச்செய்கையினை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த 6 ஏக்கர் காணியில் பௌத்த பன்சாலைக்கு ¾ முக்கால் ஏக்கர் காணி உள்ளது என அன்றைய காலத்தில் கூறியிருந்தார்கள் என அந்த மக்கள் தெரிவித்தனர்.
அப்போது அன்றைய காலத்தில் உதவி அரசாங்க அதிபரினால் 4 பேருக்கு அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுமதிப்பத்திரத்தை வைத்து தற்போது சுமார் 33 வருடங்களுக்கு மேலாக குறித்த காணியில் தோட்டச்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
-இந்த நிலையில் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சினால் வருகை தந்த அதிகாரிகள் அந்த மக்களோடு கதைத்து குறித்த காணியினுள் புதிதாக எந்த கன்றுகளும் நாட்டக்கூடாது என கூறி அறிவித்தல் பலகையினையும் நாட்டிச் சென்றுள்ளனர்.
-தற்போது 11 பேர் குறித்த காணியில் தோட்டச்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த காணி முழுவதையும் தற்போது விட்டு வெளியேறுமாறு தொடர்ந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த காணியினுள் தொல் பொருட்கள் உள்ளதாக கூறி தோட்டச் செய்கையாளர்களை வெளியேற்ற நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
-குறித்த 6 ஏக்கர் காணியில் பௌத்த பன்சாலைக்கு ¾ முக்கால் ஏக்கர் காணி மாத்திரமே உள்ளதாக நான் அறிகின்றேன்.இக்காணி தொடர்பான சகல ஆவணங்களும் அந்த மக்களிடம் உள்ளது.
குறித்த தோட்டச் செய்கையின் மூலமே குறித்த கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
தற்போது குறித்த தோட்டக்காணியினுள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையினால் அந்த மக்கள்; தோட்டத்தை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
தொல் பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் குறித்த 6 ஏக்கர் காணியையும் அரசாங்கம் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
தமது கடின உழைப்பால் அந்த மக்கள் பாரிய காடுகளாக காணப்பட்ட குறித்த காணியை துப்பரவு செய்து தோட்டச்செய்கையினை மேற்கொண்டு வருகின்ற போது குறித்த 6 ஏக்கர் காணியில் பௌத்த பன்சாலைக்கு ¾ முக்கால் ஏக்கர் காணி மாத்திரமே உள்ளதாக கூறப்படுகின்ற போது முழுக்காணியையும் கைப்பற்ற முயற்சிக்கின்றமையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என செல்வம் எம்.பி மேலும் தெரிவித்தார்.
( மன்னார் நிருபர்)
(29-05-2013)
கற்கிடந்த குளம் கிராமத்தில் அமைந்துள்ள 06 ஏக்கர் தோட்டக்காணியினுள் உள்ளே நுழைய தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சு அனுமதி மறுப்பு-செல்வம் எம்.பி யிடம் முறைப்பாடு(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
May 29, 2013
Rating:
No comments:
Post a Comment