விடத்தல் தீவில் மாடு அறுக்கும் தொழுவத்தில் பசு மாடு வெட்டப்படுவதாக முறைப்பாடு
விடத்தல் தீவு பகுதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் பசுமாடுகள் அறுக்கப்படுவதாக அக்கிராம மக்கள் விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மக்கள் தெரிவிக்கையில்,,,,,
விடத்தல் தீவு கிராமத்தில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் விடத்தல் தீவு,இலுப்பைக்கடவை,பெரியமாடு,கறுக்காக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு அங்கிருந்தே மாடுகள் அறுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது.
ஆனால் குறித்த கிராமங்களில் மாடு அறுப்பதற்காக தொழுவங்கள் உள்ள போதும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஏனைய மூன்று தொழுவங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள தொழுவத்தில் குறித்த 4 கிராமங்களை சேர்ந்த மாட்டு இறைச்சி விற்பனையாளர்களும் மாடு அறுக்கின்றனர்.
இந்த நிலையில் பசு மாடுகளும் கழவாக வெட்டப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த தொழுவத்தில் நிறை மாத பசு ஒன்று வெட்டப்பட்டு பசுவின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் வெட்டப்பட்ட பாகங்களாக மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த கிராம மக்கள் விடத்தல் தீவு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச சபை ஏனை மூன்று கிராமங்களிலும் அமைந்துள்ள மாடு வெட்டும் தொழுவத்திற்கு அனுமதி வழங்காததன் காரணத்தினாலேயே குறித்த சம்பவங்கள் இடம் பெற்று வருவதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபை இவ்விடையத்தில் மௌனம் காத்து வருவதாகவும்,பொது சுகாதார பாரிசோதகர்களும் இவ்விடயததில் மௌனம் காத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி றோய் பீரிஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது உரிய பதிலை வழங்கவில்லை.
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அக்கிராம மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தள்ளனர்.
விடத்தல் தீவில் மாடு அறுக்கும் தொழுவத்தில் பசு மாடு வெட்டப்படுவதாக முறைப்பாடு
Reviewed by Admin
on
May 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment