நேற்று மன்னாரில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பிலான பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் நோக்கில் மன்னார் ஆயர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முயற்சியும் தோல்வியில் முடிந்திருப்பதாகத் தெரியவருகின்றது.
மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் ஆண்டகை தலைமையில் நேற்று முற்பகல் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஐந்து கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி எந்த ஒரு இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என்று தெரியவந்திருக்கின்றது. இதனை அடுத்து நேற்று பிற்பகல் ரெலோ இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர். ஏற்கனவே நான்கு கட்சிகளும் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அமைவாக கட்சியினைப் பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலான அடுத்த கட்ட கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறும் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
த.தே.ம.முன்னணிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி
முடிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியல் தீர்வு தொடர்பில் குறைந்தபட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று மன்னாரில் இடம்பெற்றது. காலை 11.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கைரீதியான இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலையில் கூட்டம் முடிவுற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் 13 ம் திருத்தத்தினை நிராகரிக்க முடியாது என்றும், கெழும்பிலுள்ள முக்கிய சில இராயதந்திரிகள் வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டிக்காட்ட வேண்டுமென தம்மிடம் கூறியுள்ளதாகவும் எனவே தாம் அதில் கட்டாயம் போட்டியிடுவோம் என்றும் உறுதிபடக் கூறினர்.
அத்துடன் படிப்படியாக அதிகாரப்பகிர்வு அடிப்படையில் தீர்வை பெறும் முயற்சியை தாம் முன்னெடுப்போம் என்றும் எனவே அதிகாரப்பகிர்வுப் பாதையை நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில், இறைமையுடைய தமிழ்த் தேசமும், இறைமையுடைய சிங்கள தேசமும் இணைந்து தேசங்களின் கூட்டாக ஒரு இறுதித்தீர்வு எட்டப்பட்ட வேண்டும் எனவும் இத்தீர்வை அடைவதற்கான அரசியல் பாதையானது 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளை நிராகரிப்பதாகவும், அதிகாரப் பகிர்வுப் பாதையை நிராகரிப்பதாகவும் அமைய வேண்டுமெனவும் தமது கருத்துக்களை தமிழ்த்தேசியமக்கள்முன்னணியினர் முன்வைத்தனர்.
தீர்வைப் பெறுவதற்கான இவ்விரு அணுகுமுறைகளும் தமிழ்த் தேசத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலிப்பதாக இருக்கும் எனவே தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்று கூறிக்கொண்டு அவ்வாறான தீர்வுப் பாதையில் ஒருபோது செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாதிட்டனர். இவ்விரு தரப்பும் தத்தம் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்றமையினால் கொள்கை விடயம் தொடர்பில் பொது இணக்கப்பாடொன்றை எட்ட முடியவில்லை. இவ்விடயம் தொடர்பில் மிகமிகக் காரசாரமான விவாதம் 6.00 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
எனினும் கொள்கைவிடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக கொள்கை விடயங்களை தீர்மானிப்பதற்கும், கொள்கையை அடைந்து கொள்வதற்கான அரசியற் பாதை என்ன என்பதனை தீர்மானிப்பதற்குமான நான்குபேர் கொண்ட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளுமான புவிதரன், குருபரன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய அவை (Tamil National Council) ஒன்றினை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களை இணைத்து உருவாக்குவது பற்றியும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறான கவுண்சில் அமைப்பதற்கு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஆரம்பத்தில் இணங்க மறுத்தாலும் அங்கிருந்தவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக இறுதியில் கொள்கையளவில் இணங்கினர். இக்கவுண்சில் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது நிலைப்பாடு கவுண்சிலானது தமிழ் தேசத்தின் இறைமைக்கான அங்கீகாரத்தைக் கோரும் நோக்கில் அமையுமாயின் தமது ஆதரவு உண்டென்று கூறியிருந்தனர். அடுத்து தற்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் பற்றியும், அதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.
அதன்போது இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் திட்டமிட்ட இன அழிப்பு என்பதனை நாம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறப்பட்டபோது இன அழிப்பு என்று குறிப்பிடுதவற்கு ஆரம்பத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இணங்கவில்லை. எனினும் இவ்விடயம் தொடர்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகத்தினர் ஆகியோர் உறுதியாக இருந்தமையினால் இறுதியில் இன அழிப்பு என்று குறிப்பிட்டு பொது அறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு அவ்விருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயர் அதி வண தோமஸ்சவுந்தரநாயகம் அவர்களது தலைமையிலான தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதயம் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன், சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், விநோனோகராதலிங்கம், சிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து
தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாற்றவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார்.
இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாது சந்திப்பு நிறைவடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
இரா. சம்பந்தன் கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் சில முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
அவர்களது முயற்சிக்கு சகல அங்கத்துவ கட்சிகளும் பரிபூரணமாக ஒத்துழைப்பை கண்டு சமரசமாக ஓர் முடிவை காண முயற்சிக்க வேண்டும் என்ற முடிவே ஆயருடனான சந்திப்பில் போது எடுக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் தற்போது தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் பாரதூரமான பிரச்சனைகள் இனப்படுகொலை தொடர்பான பிரச்சனைகள் சம்பந்தமாக மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக தமிழ சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றையும் ஒற்றுமைப்படுத்தி இதனை எவ்விதமாக கையாள வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
வீ. ஆனந்தசங்கரி கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய விவாதம் பயனுள்ள விவாதமாக இல்லை. ஒவ்வொருவரும் தங்களினுடைய குறைகளை கூறிக்கொண்டிருந்தார்களே தவிர தமிழத்தேசியக்கூட்டமைப்பை பதிவதா? இல்லையா? என்ற நோக்கத்திற்காக கூடியிருந்த நோக்கம் நிறைவேறவில்லை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கைவிட முடியாது அது உலக அங்கீகாரம் பெற்றது என சம்பந்தர் சில காரணங்களை கூறியிருந்தார். அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் அது அவருடைய செல்வாக்கை கொண்டு அங்கீகாரம் பெறவில்லை. அது தமிழ் மக்களினுடைய பிரதிநிதித்துவத்துக்கு உற்சாகம் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டது. எனவே, 5 கட்சிகளை சேர்த்து பதிவு செய்திருக்கவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதது பெரும் தவறு.
ஏனெனில் 5 கட்சிகளும் சேர்ந்து செயற்பட்டால் தான் எமது பிரச்சனைக்கு ஏதோ ஒரு வழி கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் அடிப்படையிலதான் நானும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நடந்ததெல்லாம் அதற்கு மாறாக விவாதிப்பதும் தமது கொள்கைகளை கூறுவதுமாக இருந்தார்களே தவிர முக்கியத்துவப்படுத்தி எதனையும் கலந்துரையாடவில்லை. முக்கியமான விடயங்களுக்கு தீர்வு எடுக்கப்படவுமில்லை என தெரிவித்தார்.
அடைக்கலநாதன் எம்.பி கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
பதிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட முதல் அமர்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும் என்ற ரீதியில் விவாதிக்கப்பட்டது. இதன்போது பங்கு தந்தையொருவர் இவ்வாறு பதிவதற்கு 5 கட்சிகளும் உடன்பாட்டுடன் உள்ளீர்களா? அல்லது நான்கு கட்சிகள் உடன்பாட்டுடன் உள்ளீர்களா? என கேட்டபோது அதற்கு எனது கருத்தாக தமிழீழ விடுதலை இயக்கம் நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அது தொடர்பான சந்திப்புக்களை நாம் தமிழரசுகட்சியுடன் மேற்கொண்டுள்ளோம். இந்தவகையில் தமிழரசுக்கட்சி சில விட்டுக்கொடுப்புகளுக்கு புரிந்துணர்வின் அடிப்படையில் வருவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் உயர்மட்டக்குழு அமைக்கின்றபோது ஏனைய நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கூடுதலான அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துமுள்ளனர். இதேபோல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிந்து செயற்படுவதற்கும் தமிழரசுக்கட்சியினர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஒரு வாரத்துள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கான பொறுப்பு சுமந்திரன் எம்.பி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ஏனைய கட்சிகளுடன் இணைந்து விவாதித்து செயற்படலாம் என எங்களுக்குள் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு பின்னரே பதிவுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும் பதிவு விடயம் தொடர்பில் கலந்துiiயாடவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததாலும் பதிவு விடயம் தொடர்பான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது என தெரிவித்தார்.

Reviewed by Admin
on
May 12, 2013
Rating:

No comments:
Post a Comment