அண்மைய செய்திகள்

recent
-

27 வருடங்களின் பின் மடு-மதவாச்சி புகையிரத சேவை ஆரம்பம்.(படங்கள்)


சுமார் 30 வருடங்களின் பின் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 ''மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு'' என்பதனை நிறைவேற்றும் நோக்குடன் போக்குவரத்தில் காணும் மறுமலர்ச்சியில் இன்னுமோர் மைல்கல்லாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த புகையிரத சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை 81.34 மில்லியன் டொலரில் இந்திய நிறுவனமொன்று வழங்கிய நிதியின் மூலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமான இப்புகையிரத பயணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம,பிரதியமைச்சர் றோஹன திசாநாயக்க,வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ,போக்குவரத்து உதவி அமைச்சர் றோகன திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது ஆயிரக்கனக்காண பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.













27 வருடங்களின் பின் மடு-மதவாச்சி புகையிரத சேவை ஆரம்பம்.(படங்கள்) Reviewed by Admin on May 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.