மன்னார் நகர சபையின் கவனத்திற்கு
இவ் அமைப்பினால் 2013. 04. 16 ம் திகதி உப்புக்குளம் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் இனால் மன்னார் நகர சபை தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்வீதியினை திருத்தித்தருமாறு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இருந்தும் இப்பாதையினை திருத்துவதற்கு எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் மேலும் காலம் தாழ்த்தப்படுகின்றது. உப்புக்குளம் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் மன்னார் நகர சபையிடம் மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் உடைக்கப்பட்ட மக்கி மற்றும் கற்கள் பொருட்களைக்கொண்டு அவ்வீதியினை செப்பனிடக்கேட்டனர்.
இருப்பினும் இவ்விடயத்திலும் மன்னார் நகர சபை எவ்விதமான பதிலும் அளிக்காமல் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கின்றனர். இவ் கற்களை வேறு கிராமங்களுக்கு பகிர்ந்தளித்து அக்கிராமங்களின் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளது. மிகவும் தேவையுடைய இவ் வீதி புறந்தள்ளப்படுவதற்கான காரணம் இதுவரைக்கும் அறியப்படாமல் உள்ளது.
எனவே இவ்வீதியில் பயணிக்கும் பயணிகளின் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு மன்னார் நகர சபைத்தலைவர் மற்றும் செயலாளர் இப்பிரதேச மக்களின் நலனைக்கருத்திக்கொண்டு மிக விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிக பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.
மன்னார் நகர சபையின் கவனத்திற்கு
Reviewed by Admin
on
May 14, 2013
Rating:
No comments:
Post a Comment