நான்கு போலிக் கச்சேரிகள் பொலிஸாரால் முற்றுகை; பெண் உட்பட நால்வர் கைது
கொழும்பு, கட்டுகஸ்தோட்ட, தித்தவெல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த நான்கு போலிக் கச்சேரிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். போலி கச்சேரிகளை நடத்தி வந்த பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் பல்வேறு விதமான போலி ஆவணங்களையும் சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட பொலிஸ் குழுவினர் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றின் முன் அனுமதியைப் பெற்று கொழும்பு வாட் பிளேஸிலுள்ள வீடொன்றை சோதனையிட்டுள்ளனர். இதன் போது போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் 19 போலி முத்திரைகளுடன் 34 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் புதுக்கடை 2ம் இலக்க மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை கண்டி விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கட்டுகஸ்தோட்ட மற்றும் தித்தவெல பகுதிகளில் போலியாக நடத்தப்பட்டு வந்த மூன்று போலி கச்சேரிகளை முற்றுகையிட்டுள்ளனர்.
மூன்று நிலையங்களிலிருந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, திருமண, பிறப்புச் சான்றிதழ்கள், காணி உறுதிப்பத்திர ங்கள், கல்விச் சான்றிதழ்களையும் நிறுவனங்களின் பிரதானிகளின் பலரது போலி இறப்பர் முத்திரைகளையும் மீட்டெ டுத்துள்ளனர். சந்தேக நபர்கள் கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
May 16, 2013
Rating:

No comments:
Post a Comment