வகுப்பொன்றுக்கு மாணவர் 35 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் ஆண்டு முதல் 12 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உயர் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பொன்றின்படி வகுப்பொன்றின் மாணவர் தொகையை 35 ஆக 2016 ஆம் ஆண்டுக்குள் மட்டுப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி 2014 ஆம் ஆண்டு முதல் வகுப்பொன்றில் இருக்க வேண்டிய மாணவர் எண்ணிக்கையை 45 முதல் படிப்படியாக 40 ஆக குறைத்து 2016 ஆம் ஆண்டு 35 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
வகுப்பொன்றுக்கு மாணவர் 35 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை
Reviewed by Admin
on
May 12, 2013
Rating:

No comments:
Post a Comment