முருங்கனில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தான நிகழ்வு (படங்கள் )
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையினால், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு முருங்கன்பிட்டியிலுள்ள முருங்கன் பிரதேச வைத்திய சாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் இன்று புதன்கிழமை 43 பேர் இரத்த தானம் செய்து சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் திருமதி பிரியன் வட உள்ளிட்ட தாதியர்கள் மற்றும் செஞ்சிலுவை தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மேற்பார்வை மற்றும் அனுமதி முருங்கன் வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி டாக். எம். ஓஸ்மன் சார்ல்ஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
கலவர சூம்நிலைக்கு பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தினால் முதற் தடவையாக நடமாடும் இரத்ததான நிகழ்வானது முருங்கன் பிரதேசத்தை இலக்காக கொண்டு நடாத்தப்பட்டது. இதில் முருங்கன் பாடசாலை மாணவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டமையையும் இதற்கான அனுமதியினை வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.
இந்த நிகழ்வினால் முருங்கன் பிரதேசவாசிகள் செஞ்சிலுவை சங்கத்தின் மனிதாபிமான செயற்பாடுகளை அறியக்கூடியதாக இருந்ததோடு முருங்கன் முற்றும் மடு செஞ்சிலுவை அங்கத்தவர்களும் இலகுவாக கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரத்ததான நிகழ்வில் பங்குகொண்ட அனைத்து மனிதநேய தியாகிகளுக்கு நன்றிகள்!
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
மன்னார் மாவட்டக்கிளை

Reviewed by Admin
on
May 22, 2013
Rating:
No comments:
Post a Comment