அத்துமீறி அடாத்தாகப்பிடித்த காணிகளை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை.
மன்னார் எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி அடாத்தாகப்பிடித்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள அரச காணியினை அத்துமீறி அடாத்தாக பிடித்து தற்போது குறித்த காணிகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிழ் நகர் கிராம சேவையாளரினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி(17-05-2013) மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களை தாங்கள் அமைத்துள்ள தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதம் உரிய தரப்பினருக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறி தொடர்ந்தும் காணிகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
இதே வேளை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 600 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சாந்திபுரம்,சௌத்பார்,எமிழ் நகர் போன்ற கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே எமிழ் நகர் பகுதியில் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றி அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது
அத்துமீறி அடாத்தாகப்பிடித்த காணிகளை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை.
Reviewed by Admin
on
May 24, 2013
Rating:

No comments:
Post a Comment