மன்னாரில் ''தேருநர்களின் தினம்'' தொடர்பிலான முன்னேற்பாட்டுக்கூட்டம்.
தேர்தல் ஆணையாளரினால் நடாத்தப்படவுள்ள ''தேருநர்களின் தினம்'' தொடர்பிலான வேலைத்திட்டம் தொடர்பில் சகல தரப்பினர்களுக்கும் விழிப்பூட்டும் நிகழ்வொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற இருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர தெரிவித்தார்.
எதிர் வரும் யூன் மாதம் 01 ஆம் திகதி ''தேருநர்களின் தினம்''ஆக தேர்தல் ஆணையாளரினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முன்னேற்பாடாக எதிர் வரும் 30 ஆம் திகதி சகல தரப்பினருக்கும் விழிப்பூட்டும் நோக்குடனும் வாக்காளர் கணக்கெடுப்புப் பணியினை சிறப்புடன் ஆற்றுவதற்காகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னேற்பாட்டு கூட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ''தேருநர்களின் தினம்'' தொடர்பிலான முன்னேற்பாட்டுக்கூட்டம்.
Reviewed by Admin
on
May 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment