ஊனமுற்று கல்வியை தொடர முடியாத சிறார்களுக்கான உதவி கோரல்.
இற்றை வரை சுமார் 2000 நபர்கள் இந்த இலவச சேவை மூலமாக பயனடைந்துள்ளனர். இவர்களில் இளைஞர்47 % , வயோதிபர் 28% , பெண்கள் 18 % சிறார்கள் 07 % அடங்குவர். பல நல்ல இதயங்கள் கொண்ட மக்கள் பலர் சுமார் 35 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை எம்முடன் தொடர்பு கொண்டு ஆற்றியுள்ளனர். இதனால் ஊனமுற்ற குடும்பங்கள் தமக்கு தெரிந்த தொழில்களான விவசாயம், கடற்றொழில், வாகனச்சாரதி, நடமாடும் வியாபாரம், குடிசைக்கைத்தொழில், கல்வி கற்பித்தல், சிறுகடை வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் சுமார் 80 சிறார்கள் கை, கால்கள் இழந்த நிலையில் தொடர்ந்து கல்வி கற்க போதிய வசதிகளின்றி பிறர் உதவியை நாடியுள்ளனர். இவர்களுள் 6 வயது தொடக்கம் 18 வயது வரையான 33 சிறுமிகளும், 47 சிறுவர்களும, அடங்குவர் இவர்களுள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 சிறார்களும்;.(ஆண்கள் 16, பெண்கள் 10) மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 27 சிறார்கள் ( ஆண்கள் 19, பெண்கள் 08) வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 03 சிறார்கள் (ஆண்கள் 02, பெண்கள் 1) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 24 சிறார்கள் (ஆண்கள்10, பெண்கள் 14) அடங்குவர்.
இவர்களில் ஒரு கால் அல்லது இரு கால்களை இழந்த 41 சிறார்களும், ஒருகை அல்லது இரு கைகளையும் இழந்த 14 சிறார்களும், சார்பு உறுப்புக்கள் (போலியோ சப்பாத்து, விசேட சப்பாத்து, கட்டைக்கால் சப்பாத்து) தேவைப்படும ); 25 சிறார்களும் உள்ளனர். வறுமைக்கோட்டில் வாழும் இந்தச் சிறார்கள் தமது கல்வியைத் தொடர வைத்திய கலாநிதி டீ. பனகமுவ அவர்களின் தலைமையில் இயங்கும் 'மேத்தா நிறுவனத்தை' நாடியுள்ளனர்.
பெரும்பாலும் இவர்களின் அடிப்படைத்தேவையான பாடசாலைக்கல்வியைத் தொடர பெண்கள் துவிச்சக்கர வண்டி, மேலதிக கல்விக்கான மாதாந்த நிதியுதவி போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கும், மேத்தா நிறுவனத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். அத்தோடு இவர்களில் பலர் போசாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதாந்தம் புரதம், கொழுப்பு, விற்றமின் செறிந்த பால்மாக்கள் போன்றவற்றை வழங்குவதற்கும், பாடசாலை சீருடை, புத்தகங்கள், ஒப்படைக்கு தேவையான பொருட்கள் வழங்குவதற்கும், சில சிறார்களின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் கால்களில் வளரும் எலும்புகளை 12 வயது வரை சத்திர சிகிச்சை செய்வதற்கும், உடலின் பல இடங்களில் சணணஙகள் இருப்பதால் தொடர்ந்து அறுவைச்சிகிச்சை செய்வதற்கும், மேத்தா நிறுவனத்தின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
' உதவி செய்ய முன்வருபவர் தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், மத தாபனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், ஏனைய சேவை நிறுவனங்கள் போன்றவர்கள் , 'மேத்தா நிறுவன ' தொடர்பு அதிகாரியான திரு. பீற்றர் சின்கிலேயர் உடன் தொடர்பு கொள்ளுமாறு வினயமுடன் வேண்டப்படுகின்றனர். இவர்களுக்கு பாதிப்படைந்த சிறார்களின் விபரங்கள் (பெயர், விலாசம், பாடசாலை, கல்வி ஆண்டு, பெற்றோரின் விபரம், வங்கி சேமிப்புக்கணக்கு இலக்கம் மற்றும் ஏனைய அவசியமான தகவல்கள்) அனுப்பி வைக்கப்படும். உதவி புரிவோர் நேரடியாக பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையைப் பொறுத்து மாதாந்தம், வருடாந்தம், அல்லது ஒரு தடவை உதவி தொகையை கணக்கிலக்கத்தில் வைப்பிலிட்டு உதவ முடியும். இந்த கடவுளின் குழந்தைகளுக்கு உதவிடவும், அநாதரவான வேளையில் கரம் நீட்டி கடவுளின் கருணையைக் கண்டுகொள்ள நல் மனமுள்ளோரைக் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
திரு. சின்கிலேயர் பீற்றர்,
மேத்தா தொடர்பு அதிகாரி,
மன்னார் மாவட்ட வைத்தியசாலை
ஆஸ்பத்திரி வீதி,
மன்னார்.
தொலைபேசி : 077-2131-652
E mail : petsinclair@gmail.com
ஊனமுற்று கல்வியை தொடர முடியாத சிறார்களுக்கான உதவி கோரல்.
Reviewed by NEWMANNAR
on
May 07, 2013
Rating:
No comments:
Post a Comment