உலகமெங்கும் மனிதாபபணிகள் செய்து உயர்ந்து நிற்கும் செஞ்சிலுவைச் சங்கம் இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்: 08.05.2013(Video)

உலகமெங்கும் மனிதாபபணிகள் செய்து உயர்ந்து நிற்கும்
செஞ்சிலுவைச் சங்கம்
இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்: 08.05.2013
இன்று சர்வதேச செஞ்சலுவைத் தினமாகும். சர்வதேசம் முழுவதும் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. போர்கால சூழலிலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதும் இச்சங்கம் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காது.1828ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனிவா நகரில் செஞ்சிலுவைச் சங்க ஸ்தாபகரான கென்றி டுனான்ட் பிறந்தார். சிறு வயதிலேயே சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் இளைஞராயிருந்த போது 1859ம் ஆண்டு ஜீன் மாதம் வடக்கு இத்தாலியிலுள்ள சொல்பரினோ நகருக்குச் சென்றார். இதன் போது பிரான்ஸ் - ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கிடையில் யுத்தம் நடந்ததால் அங்கு பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின் துன்பங்களைக் கண்டார். மரணத்தின் பிடியிலிருந்து குற்றுயிராய்க் கிடந்த 40 ஆயிரம் போர் வீரர்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து மருத்துவ உதவியும் புரிந்தார். சொல்பரினோ மக்களும் இவருடன் சேர்ந்து முதலுதவிச் சிகிச்சை அளித்தார்கள்.
எதிர்காலத்தில் உலகில் ஏற்படும் யுத்தங்களினால் இன்னல்படும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென இவர் திடசாங்கம் பூண்டார். இந்த மனிதநேய இலட்சியம் காரணமாக 1863ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்கம் உதயமாகியது. இவரின் அரும்பெரும் பணிக்காக நோபல் பரிசு அவரைத்தேடி வந்தது.
1910ல் கென்றி டுனான்ட் தனது இலக்கை எய்தினார். ஆனால் அவர் பிறந்த மே 8ம் திகதியே சர்வதேச செஞ்சிலுவைத் தினமாக கொண்டாடப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்;ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏழு உயர்ந்த கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து மனிதாபிமான பணிகளை செயல்படுத்தி வருகின்றது. அவையாவன் :
மனிதநேயம்

பாராபட்சமின்மை
இது தேசிய, இன, மத, வர்க்க, அரசியல் முதலான வேறுபாடுகளை கொண்டதல்ல. அனர்த்தங்களின் போது மிகவும் அவசரமான உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் தேவைக்கேற்ப உதவிகள் வழங்குதல்
நடுநிலமை
எல்லோருடைய நம்பிக்கயையும் தொடர்ந்து தக்கவைக்கும் பொருட்டு, கலகங்கள் ஏற்பட்ட வேளையில் இன, மத, வேறு கொள்கை கோட்பாடுகளுக்கு அப்பால் நடுநிலமையை பேனுதல்;
சுயாதீனம்
செஞ்சிலுவைச் சங்க அமைப்பு சுதந்திரமானது. தேசிய இயக்கங்கள் மனிதாபிமான சேவையில் அரசாங்கத்திற்கு துணையாகவும் நாட்டின் சட்ட திட்டங்களையும் அதேவேளை அமைப்பின் சுய அதிகாரத்தை எப்போதும் காப்பாற்றுவதற்கு அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்கி செயற்படும்.
தொண்டர்சேவை
இச் சேவை எவ்வித இலாபமீட்டும் நோக்கமற்ற மக்களின் துயர் துடைக்கும் அமைப்பாகும். இதில் வாலிபர்கள் ஆண் பெண் இரு பாலாரும் சேவை செய்கிறார்கள்
ஒருமைப்பாடு
எந்த ஒரு நாட்டிலும் ஒரே ஒரு செஞ்சிலுவைச் சங்கமே இருக்க முடியும். அதன் கதவுகள் சகல பிரஜைகளுக்கும் திறந்திருப்பதுடன் நாட்டின் எல்லைகளுக்குட்பட்ட சகல பகுதிகளிலும் மனிதாபிமானச் சேவைகளைச் செய்யும்.
சர்வதேசமயம்
செங்சிலுவை அமைப்பு ஓர் உலகளாவிய நிறுவனம். அதில் அங்கம் வகிக்கும் சகல தேசிய சங்கங்களும் சம உரிமையுடன் பொறுப்புக்கள், கடமைகளை பகிர்ந்து கொண்டு தமக்குள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து இயங்கும்.
- Sir. Jean Henry Dunant அவர்கள் 1863 ம் ஆண்டு தனது யுத்த அனுபவத்தினை ' சொல்பரினோவின் நினைவுகள்' எனும் புத்தகம் ஒன்றை எழுதினார்.
- 1863ம் ஆண்டு ஐவர் கொண்ட சர்வதேச குழு காயமுற்ற இராணுவத்தினருக்கு உதவும் முகமாக நிறுவப்பட்டது. பின்னர் இக்குழுவானது 'செஞ்சிலுவை சர்வதேச குழு என 1876ல் பெயரிடப்பட்டது.
- வெள்ளை நிறப் பின்னனியில் உள்ள செஞ்சிலுவையானது பாதுகாப்பு சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- காயமுற்ற படையினருக்கு உதவும் இத்தேசிய குழுக்கள் பல நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவையே முதன்முதலில் நிறுவப்பட்ட தேசிய சங்கமாகும்.
- செஞ்சிலுவையின் முதலாவது மாநாடு 1867ம் ஆண்டு இடம் பெற்றது.
- 1901ம் ஆண்டு ளுசை. துநயn ர்நசெல னுரயெவெ க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சர்வதேச மனிதபிமான சட்டங்கள்
இது ஆயுதங்களின் பாவனை மற்றும் யுத்த முறைமைகளை மட்டுப்படுத்தும் ஒரு தொகை விதிகளை கொண்டது. இச்சட்டமானது போரில் ஈடுபடாத மற்றும் மோதலில் ஈடுபட்டு விலகி உள்ளவர்களை பாதுகாக்கும் சட்டமாகும். இச்சட்டத்தின் நோக்கமானது போர்ச்சூழ்நிலைகளில் மனிதனின் கௌரவத்தை பாதுகாப்பதும் மற்றும் போரினால் ஏற்படும் அவலங்களை குறைப்பதுமாகும்.
கிளை மட்டத்திலான சகல மனிதபிமான செயற்பாடுகளும் திறமைமிக்க தொண்டர்களுக்கு பொருத்தமான பயிற்சிகளை வழங்குவதன் முலமாக ஆற்றப்படுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு தேவையான நிதியானது உள்நாட்டு மற்றும் சர்வதேச கொடையாளிகளால் வழங்கப்படுகிறது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளக செயல் திட்டங்களாக சுகாதாரமும் பராமரிப்பும் ,அனர்த்த முகாமைத்துவம், நிறுவனத்தின் அபிவிருத்தி மற்றும் மனிதபிமான விழுமியங்கள் என்பன விளங்குகின்றன.
சுகாதாரமும் பராமரிப்பும்.
- அனர்த்ததின் பின்னரான நடமாடும் சுகாதார சேவை.
- சமுக அடிப்படையிலான சுகாதார திட்டங்கள்.
- எச். ஜ .வி எயிட்ஸ் பற்றிய பாதுகாப்பு திட்டங்கள்.
- முதலுதவி வழங்குதலும், முதலுதவி பயிற்சியும்;
- இரத்ததான ஆட்சேர்ப்பு.
- நோயாளர் காவு வண்டி சேவை (Ambulance Service).
- அனர்த்த முகாமைத்துவம்.
எவ்வகையான அனர்த்த நிலமைகளிலும் பாதிப்புற்றோருக்கு உதவிகள் மற்றும் அளர்த்த மீளினைப்பினுடாக நிவாரணங்கள் வழய்குதல்.
குடும்பங்கனின் தொடர்புகளை மீளினைக்கும் முகமாக இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். கண்டுபிடிக்கப்பபட்டவர்களை மீளவும் குடும்பத்துடன் இணைத்தல். தபால் சேவைகளை ஆகாயவிமானம் முலம் நடத்துதல்.
மனிதபிமான பண்புகளின் மேம்பாடு.
ஊழியர்கள் தொண்டர்களுக்கான பண்புகளை மேம்படுத்த செஞ்சிலுவைச் சங்க கோட்பாடுகள் மற்றும் மனிதபிமானகளுக்கான மக்கள் நேர்மைத்தன்மை, பங்காளியாய் இருத்தல், பல்வேறுபட்ட தன்iமை, தலைமைத்துவம் மற்றும் சுயமரியாதை முன்னெடுப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல். அதன் முலம் ஒவ்வொருவர் மத்தியிலும் சமாதானத்தையும், கௌரவத்தையும் ஏற்படுத்த உதவுதல்.
இலங்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவையாகும். 24மணி நேரமும் தனது சேவையை விஸ்த்தரித்து செயல் படுத்துவது, இந்த அமைப்பு மனித உயிர்கள் மேல் வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் தெளிவுபடுத்தி நிற்கிறது.
1936ம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட கொடிய மலேரியா தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்ட வேளையில்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் இலங்கைக்கு முதன்முதலில் கிடைத்தது.
1958ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டபோது மக்களை பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததை மறந்துவிட முடியாது.
1971 தொடக்கம் 1977 வரை தொடர்ந்த கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தது.
மேலும், கடந்த முன்று சகாப்த்தங்களாக நிலவி வந்த வடக்கு கிழக்கு கலவர சூழ்நிலையின்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிளும் உள்ள சகல மாவட்ட கிளைகளின் முலம் இன்று வரை தமது மனிதநேய பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அகதிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்வதுடன் அவர்கள் வாழ்கையில் நம்பிக்கையூட்டும் விதமாக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் உக்கிரமான போர் நடக்கும் வேளைகளில் அரசாங்கத்திற்கும், விடுதலப்புலிகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம், பரஸ்பர உறவு இவற்றை மேம்படுத்தி சமாதான சூழலை பாதுகாப்பதற்கு உதவி செய்து வந்துள்ளது. மேற்படி மனிதபிமான பணிகளுக்கு மேல் போரினால் வீடுகளை இழந்த மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது.
வடமாகாணம் 40,000 இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டங்கள்.
இந்த ஆண்டு விசேடமாக வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டபடி 40,000 இந்திய வீடுகளில் ஏறத்தாள 16,000 வீடுகளை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கட்டும் வேலைகள் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக பரீட்சாத்திகரமான 1000 வீடுகளை வருட ஆரம்பத்தில் கட்டிமுடித்து பங்காளிகளுக்கு பாரம் கொடுத்துள்ளது. மிகுதியான வீடுகளை 2013-2014ம் ஆண்டுகளல் பொதுமக்களுக்கு பாரம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான மல சல கூடங்களையும் கட்டிக்கொடுத்துள்ளது. பல பயிற்சி வகுப்புகளையும், கல்வி சேவைகளையும் நடாத்திவருகிறது. ஆனால், தற்போது செஞ்சிலுவை சங்கத்திற்கான வெளிநாட்டு உதவிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், உள்ளுர் தலைவர்களும், அமைப்புக்களும் முன்வந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை தொடர்ந்து நடாத்துவதற்கு துணையாக இருக்க வேண்டும். இதுவே நமது தார்மீக கடமையாகும். ;
உலகமெங்கும் மனிதாபபணிகள் செய்து உயர்ந்து நிற்கும் செஞ்சிலுவைச் சங்கம் இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்: 08.05.2013(Video)
Reviewed by NEWMANNAR
on
May 08, 2013
Rating:

No comments:
Post a Comment