அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் மாவை க்கு அப்துல் பாரி கடிதம்

வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப் போவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியமும் கருத்தினை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


 இதற்கு முன்னர் இந்த அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் மூத்த அரசியல் வாதியுமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அமைப்பின் தலைவரும்வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தின் விபரங்கள் வருமாறு. வடமாகாண முஸ்லிம்களின் சமூக கலாசார மத வழிபாட்டு விடயங்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்பினையும் இது குறித்த தெளிவான பார்வையினையும் கொண்டவரான தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்புவது காலத்திற்கு பொருத்தமானதொன்று என்று நம்புகின்றோம்.

தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களில் நேர்மையானதும் சரியானதுமான தீர்மாணங்களை எந்த சமூகமும் பாதிக்காத வகையில் எடுக்கக் கூடியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரிசையில் இரா.சம்பந்தன் எம்.ஏ.சுமந்திரன்ஆகியோரது தொடரில் நீங்களும் ஒருவர் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அந்த மக்களின் வெளியேற்றத்தை எண்ணி கண்ணீர் சிந்திய மனித நேயம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதாக இன்றைய ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட அரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளதை ஒரு கணம் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களின் வரலாற்றை அறிந்தவர்ளில் நீங்கள் சிரேஷ்டமானவர் அந்த வகையில் தற்போது வடக்கின் இன உறவு தொடர்பிலும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். 1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு புத்தளம் அநுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்காலிக குடில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றமையினை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த மக்களை பல முறை சென்று முகாம்களில் சந்தித்துள்ளதுடன் இடம் பெயர்க்கப்ட்ட முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணில் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னரே நீங்கள் உங்களது சொந்த மண்ணான யாழில் மீள்குடியேறுவேன் என்ற அசையாத உறுதியுடன் இருக்கும் நேர்மையான அரசியல் வாதி என்பதை நாங்கள் நன்கு அறிவோம். குறிப்பாக இன்று வடக்கில் எற்பட்டுள்ள சில விரும்பத் தகாத சம்பவங்களுடன் குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் முஸ்லிம் மக்களையும் தொடர்புபடுத்தியும் வடக்கில் வாழ்ந்த நிலையில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறவருகின்ற போது அவர்களை வெளி மாவட்ட முஸ்லிம்கள் காணிகளை அபகரிப்பு செய்கின்றார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அபாண்டமாக கூறிவருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்

 இவர்களது நோக்கம் வன்னியில் முஸ்லிம்கள் வாழக் கூடாது அவ்வாறு வாழந்தாலும் தமிழ் ஆதிக்க அரசியல் மற்றும் உயர் அரச அதிகாரிகளிடம் மண்டியிட்டு அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. வடக்கில் தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகின்ற போது அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது அதற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு நீங்கள் விடுக்கும் அழைப்புக்களுக்கு செவிசாய்த்து இணைந்து செயற்பட நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் துர திஷ்டம் வடக்கில் வாக்குரிமை வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக அவலப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகஅ தே மொழியினை பேசும் தமிழ் மக்களை துண்டி முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வடக்கில் சில தரப்புக்கள் ஏற்படுத்தியுள்ளதன் பின்னயில் இது எந்தளவு சாத்தியமாகும் என்பதை விளக்கப்படுத்த வேண்டிய நிலை தேவையில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழியினை நிணைவுபடுத்த வேண்டிய சூழல் எற்பட்டுள்ளது.கடந்த 30 வருடம் வடக்கில் வாழ்ந்த மக்கள் அதே போன்று இலங்கையில் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் அனுபவித்த பயங்கரவாதம் ஏற்படுத்திய அழிவுகளின் வடுக்கல் இன்னும் நினைவில் இருக்கின்றது.

இதிலிருந்து ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கம் விடுதலைப் பெற்று தந்துள்ளது என்று தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை பாரக்கமுடிகின்றது.. 2009 ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சமாதானம் .அதனை தொடர்ந்து மெனிக் பார்மில் இருந்த 3 இலட்சம் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்இஅதனை அன்று அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் கடு கச்சிதமாக செய்து கொடுத்ததுடன் சர்வதேச நாடுகளின் பாராட்டினை பெற்றமை என்பவைகள் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

இது தமிழ் மக்களால் இன்றும் நினைவுபடுத்தப்பட்டுவருகின்றது என்பதை நாம் ஒரு போதும் மறக்கப் போவதில்லை. இவ்வாறான சமாதான இன நல்லறவுக்கு சாதமாக அமையும் எத்தனையோ விடயங்கள் இருக்கும் போது வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேறவருகின்ற போது அவர்களுக்கு எதிராக இன ரீதியான சிந்தனைகளையும் பிழையான ஆர்ப்பாட்டங்களையும் செய்து சர்வதேசத்திற்கு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் ஏனையவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களாகவும் காட்டும் பிரசாரங்களை தங்களது கட்சி சார்ந்தவர்கள் செய்துவருவதை புதிதாக சுட்டிக்காட்ட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல.இன்று தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றதுஅதனை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று நீதி பெற்றுக் கொடுக்க அழைப்புவிடுத்திருக்கும் தங்களது செய்தி குறித்து நாம் எதிர் கருத்தை கொண்டிருக்கவில்லை.

அது உங்களது உரிமையாகும். அதே போன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைளுக்கு முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளின் உதவியினை நாடி சென்றால் அதுவும் இனவாதமாகாத்தான் பார்க்கப்படும் என்பதை நாமறிவோம். ஒரு சமூகத்திற்கு மட்டும் ஒரு நியாயம் இஅதே மண்ணில் வாழ்ந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மீள குடியேறவரும் சகோதர சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்கள் குறித்துஇநியாயத்தை பெற்றுத் தர பேசுவதற்கு முன்வருபவர்கள் இனவாதியாகவும் மதவாதியாகவும் குழப்பக் காரர்களாகவும் சில ஊடகங்களை வைத்து பிரசாரம் செய்வது என்ன விதத்தில் நியாயம் என்று கேட்க விரும்புகின்றேன்.

   வடக்கில் தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்படுவதாக கூறும் நீங்கள்இமன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு தேவை கருதி பெறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களுக்கு மட்டும் பிரச்சினையிருக்கின்றது முஸ்லிம்கள் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை அவர்கள் வெளிமாவட்ட மக்கள் என்று பார்க்கும் நிலை களையப்பட வேண்டும்.

 இவ்விடயம் குறித்து தங்களுடன் திறந்த மனதுடன் வடக்கில் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் பேசுவதற்கு தயாராக இருப்பதாக அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் வடக்கில் தமிழ் முஸ்லிம் உறவை பாதுகாப்பதற்கு தங்களை போன்ற மனித நேயம் கொண்ட அரசியல் தலைர்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்ற எமது அன்பான வேண்டுகோளை இந்த கடிதத்தின் மூலம் தங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேட்டுள்ளார்

இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடக்கு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் மாவை க்கு அப்துல் பாரி கடிதம் Reviewed by Admin on May 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.