அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலம் மீட்பு
சடலமாக மீட்கப்பட்டவர் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேதநாயகன் யூட் சீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளிக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள பணங்கள்ளு விற்பனை நிலையத்தில் இருந்து சுமார் 35 மீற்றர் தொலைவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை வழமை போன்று பனங்கள்ளு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் அதனை திறப்பதற்காக சென்றுள்ளார். அதன் போது சற்று தொலைவில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு விடத்தல் தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விடத்தல் தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் சடலப்பரிசோதனைக்காக ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். தற்போது சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்தவருக்கு 4,8,12 ஆகிய வயதுடைய மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் அவருடைய மனைவி மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிவதாகவும் தெரிய வந்துள்ளது.மேலதிக விசாரணைகளை விடத்தல் தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலம் மீட்பு
Reviewed by Admin
on
May 07, 2013
Rating:

No comments:
Post a Comment