சிறீதரன் எம்.பி. விசாரணைக்கு அழைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் சுவீகரிக்கப்படும் காணிகள் தொடர்பான விவரங்களை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகங்களுக்கு வழங்கினார் என்று தெரிவித்து அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றுக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றுள்ளனர்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லையென்று தெரிவிக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் கைத்தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். தாம் இப்போது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொலைபேசியில் கூறியுள்ளனர்.
எனினும் தனக்கு இன்று (நேற்று) நேரமில்லை அவர் தெரிவித்ததையடுத்து விசாரணைத் திகதியை பின்னர் அறிவிப்பதாக அவர்கள் கூறிச் சென்றுள்ளனர். இதேவேளை கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் படையினர் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்குத் தகவல் வழங்கியமைக்காக விசாரணைக்குபடுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறீதரன் எம்.பி. விசாரணைக்கு அழைப்பு
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment