அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!06.02.2026 வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியிலேயே  போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையயில் முல்லைத்தீவு விசேஷ போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(02)  

புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியிலிருந்து

ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் 


நேற்றைய தினம் (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில் 14  கிராம் ஐஸ் உடன் ஐந்து பேரும் வெகனார் வாகனம் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் களும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் 


இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் இவர்களை பொலிஸ் காவ‌லி‌ல் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கு‌றி‌த்த மூவரையும் 06.02.2026 வரை. அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க  நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 







புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!06.02.2026 வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு Reviewed by Vijithan on February 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.