விடுமுறையில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் உட்பட மூவர்
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு வந்திருந்தனர்.
தம் விடுமுறையை கழித்துவிட்டு சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்த வேளையிலேயே இக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜீவன் ஜெயந்திமாலா தம்பதியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இவர்களது ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்போமாக!
விடுமுறையில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் உட்பட மூவர்
Reviewed by Admin
on
May 08, 2013
Rating:

No comments:
Post a Comment