சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கருக்கலைப்பு மருந்து சிகரட் அழிக்கப்பட்டன
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கொண் வரும் போது விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட சுமார் ஒரு கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த மருந்து வகைகள், வாசனைத் திரவியங்கள், செய்மதி தொலைத் தொடர்பு இயந்திரங்கள், சிகரட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களே இவ்வாறு அழிக்கப் பட்டன. அழிக்கப்பட்டவற்றில் 95 வீதமான பொருட்கள் இந்தியா மற்றும் பாகிஸ் தான், டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மருந்து சிகரட் வகைகள் என தெரிய வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து பல்வேறு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சட்டவிரோத பொருட்கள் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இம்மாதம் 7ம் திகதி வரையிலான சுமார் ஒருமாத காலப்பகுதிக்குள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையே அழிக்க தீர்மானித்ததாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.
கடந்த ஒருமாத காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள சுங்க பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் பி. விஜேவீர, அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எம். புவிஹரன் ஆகியோர் தலைமையிலான உயர் அதிகாரிகள் அழிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் அவற்றை காண்பித்தனர்.
மேற்படி பொருட்களை விமான நிலைய அங்க அதிகாரிகள் கைப்பற்றிய முறைகளையும் இந்த பொருட்களை வெளியில் விடுவதால் ஏற்படும் பாரதூரமான பாதிப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தனர். சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களான எம். புவிஹரன், திலக் பெரேரா, விமான நிலைய பணிப்பாளர் சரத் நோனிஸ், சுங்க அத்தியட்சகர் நியாஸ், சுங்க திணைக்களத்தின் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லெஸ்லி காமினி ஆகியோர் மேற்படி பொருட்களை பார்வையிட்ட பின்னர் அவை அழிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.
நாளாந்தம் பெருந்தொகையான பொருட்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை தடுக்கவும், தரம் குறைந்த பொருட்கள் மக்களை சென்றடையாமல் இருக்கவும் சுங்க திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எம். புவிஹரன் தெரிவித்தார். அரச ஆஸ்பத்திரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் சட்டபூர்வமான நிறுவனங்களும் சட்ட விதிமுறைகளும் உள்ளன.
அரச ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்கிறது. தனியார் நிறுவனத்திற்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு மருந்துப் பொருட்கள் சீராக்கல் அதிகார சபையில் அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்கள் உள்ளன. இதனை தவிர வேறு வழிகளில் மருந்து வகைகளை கொண்டு வருதல், களஞ்சியப்படுத்துதல், விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த அடிப்படையிலேயே பெருந்தொகை மருந்துகள் சட்ட விரோதமாக பயணிகள் கொண்டு வந்த நிலையில் கைப்பற்றப்பட்டன என்றார்.
கைப்பற்றப்பட்ட மருந்துகளில் விlonazலீpaசீ என்ற மருந்து அடங்குகிறது. இது 81,900 மாத்திரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 40 இலட்சத்து 95 ஆயிரமாகும். மன நோயாளிகளுக்காக வழங்கப்படும் இந்த மருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு போதை ஏற்படும் மருந்தாக விநியோகிக்கப்படுகிறது.
அதேபோன்று மருந்து சீராக்கல் சட்டத்தின் மூலம் தனியார் துறையினருக்கு கொண்டு வரப்பப்பட்டஹிhaliனீoசீiனீலீ எனப்படுகின்ற 5370 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 12 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாவாகும். சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் ணிisoprostal என்ற மாத்திரைகள் 572 கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 42 இலட்சத்து 92 ஆயிரமாகும். அத்துடன் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகளின் போதும் அவசர சிகிச்சை பிரிவிலும் பயன்படுத்தப்படும் ஊசி மருந்து பல கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஊசி மருந்து குப்பி ஒன்றின் விலை ஒன்றரை இலட்சமாகும். இவை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வரும் போதே கைப்பற்றப்பட்டன என்றார்.

Reviewed by NEWMANNAR
on
May 09, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment