குஞ்சுக்குளம் மல்வத்து ஓயாவில் நீராடிய இருவர் பலி
மன்னார் குஞ்சுகுளம் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்தில் நீராடிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் மூவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேசாலை, உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றிருந்த போது மேற்படி நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த போதே இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது,பேசாலை உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 33) என்ற குடும்பஸ்தரும் அதே கிராமத்தைச் சேர்ந்த அனுசியா (வயது 18) என்ற யுவதியுமே உயிரிழந்தவர்களாவர். இவர்களுடைய சடலங்கள் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குஞ்சுக்குளம் மல்வத்து ஓயாவில் நீராடிய இருவர் பலி
Reviewed by Admin
on
May 10, 2013
Rating:

No comments:
Post a Comment