வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க வாய்ப்பு
வடக்கிலிருந்து இடம்பெயயர்ந்து வேறு மாகாணங்களில் தங்கியுள்ள மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிப்பது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 'வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள்' சட்டமூலம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும், ஆவணங்களையும் கைவிட்டு, வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்கள் வடமாகாணத்தில், உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த போதிலும் நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் குடியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிப்பதற்கு இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது அவசியமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Reviewed by Admin
on
May 10, 2013
Rating:

No comments:
Post a Comment