அண்மைய செய்திகள்

recent
-

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிகளில் கட்மியம் எனப்படும் விஷம்


நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனிகளில் கட்மியம் எனப்படும் விஷ இரசாயனம் காணப்படுகின்றமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகின்றது.



ரஜரட்ட பகுதியில் சிறுநீரக நோய் காணப்படுகின்றமை தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி டீ.பீ.டீ.விஜேரத்ன குறிப்பிட்டார்.

நுகர்வுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக இவற்றில் இரசாயன பொருட்கள் சில கலக்கப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் அப்பிள் மற்றும் திராட்சை போன்ற பழங்களிலும் விஷ இரசாயனம் காணப்படுகிறதா? என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிகளில் கட்மியம் எனப்படும் விஷம் Reviewed by Admin on May 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.