அண்மைய செய்திகள்

recent
-

பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பு


மனித வரலாற்றில் முதல் தடவையாக பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்க அரசாங்கத்தின் ஹவாய்யிலுள்ள ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட நாளாந்த அளவீடுகளின் பிரகாரம் முதல் முறையாக காபனீரொட்சைட் 400 PPM அளவை எட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

3 தொடக்கம் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே காபனீரொட்சைட் 400 PPM  அளவை விட அதிகமாக காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வானிலையும் குறிப்பிடத்தக்களவில் வெப்பமானதாக இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மைய தசாப்தங்களில் பூகோள வெப்ப உயர்வை ஏற்படுத்தும் வாயுக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக காபனீரொக்சைட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on May 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.