அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள்,படுகொலைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் சமரசமாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஓர் அங்கத்துவக்கட்சியாகிய  தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) பல முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,

தமிழிழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் முயற்சிகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை தந்து இந்த விடயம் தொடர்பாக சமரசமாக ஒரு முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

குறித்த கலந்தரையாடலில் தற்போது தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள்,இனப்படுகொலைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடயம் சம்மந்தமாக தமிழ் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள்,தமிழ் சிவில் அமைப்பு ,பொதுமக்கள் ஆகியோரை ஒற்றுமைப்படுத்தி இவ்விடையத்தை எவ்வாறு கையால்வது தொடர்பில் முடிவெடுத்து அவை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,

மன்னார் ஆயர் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் பிரதி நிதிகளும்,தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரதி நிதிகளும் இணைந்து மன்னார் கீரி ஞானோதையத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன அழிப்பை எதிர்கொள்வது குறித்து ஆராயப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய அரசியல் தீர்வு சம்பந்தமாக பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக வரைபொன்றை மேற்கொள்ள  குழுவொன்று உருவாக்கப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பாக விரைவில் மீண்டும் கூடி கலந்துரையாடுவது என முடிவெடுக்கப்பட்டது.என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.


தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள்,படுகொலைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. Reviewed by NEWMANNAR on May 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.