அண்மைய செய்திகள்

recent
-

காணிச்சட்ட​ங்கள் தொடர்பான கருத்தரங்கு

20-05-2013 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் காணிச்சட்டங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக சட்டமாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் ஓர் கலந்துரையாடல் பல்கலைக்கழக மாணவர்கட்காக இடம் பெற்றது.

இதில் பல்கலைக்கழக மாணவர்களோடு விரிவுரையாளர்களும் பங்கு பற்றியமை குறிப்பிடக்கூடியதாகும். இங்கு மாணவர்கள் தங்கள் வினாக்களுக்கு தெளிவான விடைகளை வளவாளர்களிடமிருந்து பெற்றதோடு இன்றைய நடைமுறை காணி சுவீகரிப்பு தொடர்பான செயற்பாடுகளையும் அதன் சட்டவலிதாண்மையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.

இதில் வளவார்களாக முன்னை நாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திரு.குருநாதன் மற்றும் சட்ட விரிவுரையாளர், சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான திரு.குருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணிச்சட்ட​ங்கள் தொடர்பான கருத்தரங்கு Reviewed by NEWMANNAR on May 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.