மின் விளக்குகள் இல்லாத நிலையில் மன்னார் சந்தை கட்டிடத்தொகுதி.
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு முன் சந்தைக்கட்டிடம் உள்ளது.இங்கு பல விதமான வர்த்தக நிலையங்கள் உள்ளது.காலை 7 மணிக்கு திறக்கப்படுகின்ற குறித்த வர்த்தக நிலையங்கள் மாலை 6.30 மணிக்கு மூடப்படுகின்றது.
எனினும் அப்பகுதியைச் சூழ பல தெரு மின் கம்பங்கள் உள்ள போதும் அவற்றில் உள்ள தெரு மின் குமிழ்கள் ஒளிர்வதில்லை.இதனால் இரவு நேரங்களில் வர்த்தகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-இரவு நேரங்களில் குறித்த பகுதிகளில் குற்றச் செயல்களும் இடம் பெறுவதற்காண சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டுள்ளது.
எனவே மன்னார் நகர சபைக்கு சொந்தமான குறித்த சந்தைக்கட்டிடத்திற்கு அதனைச்சூழ்ந்த பகுதிகளுக்கு தெரு மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் விளக்குகள் இல்லாத நிலையில் மன்னார் சந்தை கட்டிடத்தொகுதி.
Reviewed by NEWMANNAR
on
May 21, 2013
Rating:
No comments:
Post a Comment