மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 950 மின் பாவனையாளர்களது மின் இணைப்புக்கள் துண்டிப்பு.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக் கொண்ட மின் பாவனையாளர்களை உடனடியாக தமது மின்பாவனைக்கான கட்டண நிலுவைகளை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதற்கான கால அவகாசத்தையும் மன்னார் மின்சார சபை மின் பாவனையாளர்களுக்கு வழங்கியிருந்தது.
இவ்விடையம் தொடர்பாக ஒலி பெருக்கி மூலம் பொது அறிவித்தல்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் கட்டமாக அறிவித்தல்களையும் மீறி இறுதி நிலுவைத் தொகை 25 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உள்ள 950 மின் பாவனையாளர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு,அவர்களுடைய இணைப்புக்கள் தறபோது துண்டிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரை 550 பாவணையாளர்களுடைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 பாவணையாளர்களுடைய இணைப்புக்கள் துண்டிப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்களில் பாடசாலை,வீடு,வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் ஆகியவை உள்ளடங்குகின்றது.
மேலும் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவைத்தொகை செலுத்தாத அணைத்து மின் பாவனையாளர்களுடைய மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்வுள்ளதாக தெரிவித்த மின் அத்தியட்சகர் தற்போது துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை மீளப்பெற மின் பாவணையாளர்கள் தங்களின் நிலுவைகளில் 2 வீதம் தண்டப்பணமும்,மீள் இணைப்புத்தொகையாக 800 ரூபாவும் செலுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர் மிஸ்ரக் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 950 மின் பாவனையாளர்களது மின் இணைப்புக்கள் துண்டிப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 15, 2013
Rating:

No comments:
Post a Comment