தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையினால் நோயாளர்கள் அசௌகரியம்.
தலைமன்னார் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுகின்றமையினால் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார்.இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அவர் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பேசாலை வைத்திய அதிகாரி பதில் கடமையில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் அவர் சில நேரங்களில் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி கடமைக்கு சமூகம் தராது இருப்பார்.இதனால் காலையில் இருந்து மாலை வரை வைத்தியரின் வருகைக்காக காத்திருக்கும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக பாதீக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்தனர்.
-தலைமன்னார் கிராமம்,தலைமன்னார் ஸ்ரேசன்,கட்டுக்காரன் குடியிருப்பு,பருத்திப்பண்ணை,செல்வபுரம்,கீழியன் குடியிருப்பு ஆகிய கிராமங்களில் இருந்து வரும் நோயளர்களே இதனால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் எவ்வித தனியார் மருத்துவ நிலையங்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது.இதனால் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலும் ஒரு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு அந்த பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முஹமட் பரீட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
- தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரே நிரந்தர வைத்தியராக கடமையாற்றி வருகின்றார்.அவர் எவ்வித விடுமுறைகளிலும் செல்லாது அங்கு தங்கியிருந்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.தற்போது அவர் ஒரு வார கால விடுமுறையில் சென்றுள்ளார்.
அவருக்கு பதிலாக பேசாலை வைத்திய அதிகாரி பதில் கடமையில் ஈடுபட்டு வந்தார்.அவர் கடந்த திங்கட்கிழமை (20.05.2013) திடீர் சுகவீனம் காரணமாக கடமைக்குச் செல்லவில்லை.
தற்போது அவர் தொடர்ந்து கடமைக்குச் செல்லுகின்றார்.என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முஹமட் பரீட் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
(23-05-2013)
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையினால் நோயாளர்கள் அசௌகரியம்.
Reviewed by NEWMANNAR
on
May 23, 2013
Rating:
No comments:
Post a Comment